- °C
Are You a business owner?
List Your Business / ADகோவை: தமிழ்நாட்டில் இப்போது கோவை மிக வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. பல நிறுவனங்கள் கோவையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கிடையே கோவையில் அமையவுள்ள ராணுவ தொழிற்பூங்காவுக்கான அனுமதியை இப்போது தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் வழங்கியுள்ளது.
அதுதான் கோவை: மேலும், தமிழ்நாட்டில் பல இரண்டாம் கட்ட நகரங்கள் இருந்தாலும் கோவை சற்று வித்தியாசமானது. ஏனென்றால் கோவை என்பது ஒரு தொழிலை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் இல்லை.. விவசாயம் வேண்டுமா விவசாயம் இருக்கு.. தொழிற்சாலைகள் வேண்டுமா தொழிற்சாலை இருக்கு.. ஐடி கம்பெனிகள் வேண்டுமா அதுவும் இருக்கு என ஆல் ரவுண்டு பெர்பாமன்ஸை தரும் நகரமாகவே கோவை இருந்து வருகிறது.
மேலும், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப புது புது தொழில் நிறுவனங்களை ஆதரிக்கும் ஊராகவே கோவை இருக்கிறது. இப்படிப் பல துறைகளில் தலைசிறந்து இருக்கும் கோவை நகரில் வளர்ச்சிக்கு மேலும் பல நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் எடுத்து வருகிறது. அதன்படி கோவையில் ராணுவ தொழில் பூங்கா அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது. இது தொடர்பான அறிவிப்பும் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
ராணுவ பொருட்கள்: இப்போது நாம் நமது ராணுவத்திற்குத் தேவையான பல விஷயங்களை இறக்குமதியே செய்கிறோம். அந்த நிலையை மாற்றி ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள், வெடி பொருட்கள், ராணுவ வாகனங்களை நமது நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. உள்நாட்டுத் தயாரிப்புக்கு முக்கியத்துவம் தர முடிவு செய்துள்ள மத்திய அரசு, அது தொடர்பான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
Copyrights © 2024 . All rights reserved. Powered by ♥ Redback
Unless otherwise indicated, all materials on these pages are copyrighted by Redback IT solutions. All rights reserved. No part of these pages, either text or image may be used for any purpose.